தாகி தம்பி வீட்டில் டமார்: காவலர் காயம்
சிவகங்கை:
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் வீட்டில் திடீரென்று துப்பாக்கி வெடித்தது. இதில்ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் கிராமத்தில் தா. கிருஷ்ணனின் அந்த வீட்டில்அவரது தம்பி ராமையா குடியிருந்து வருகிறார்.ராமையா அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். மேலும் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முக்கியசாட்சியாகவும் உள்ளார். இதனால் ராமையாவுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்தன. எனவே அவர்வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருளப்பன், இளையராஜா, ராமசாமி, பாலமுருகன், செந்தில்குமார் ஆகிய போலீஸ்காரர்கள்ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் போலீஸ் பாலமுருகனின் துப்பாக்கியை, இருளப்பன் வாங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது துப்பாக்கி விசையின் மீது அவரது கை தவறுதலாக பட்டு குண்டு வெடித்ததில் அவரது முழங்காலில்படுகாயம் ஏற்பட்டது.
உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவுநேரத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications