வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைதாகிறார்?
மேட்டூர்:
அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இயக்கம் தொடங்கியுள்ள வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைக் கைது செய்யதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரப்பன் கூட்டாளிகளுடன் தொடர்பு, தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்படலாம் என்று தெரிகிறது.வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளான நேற்று, மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய முத்துலட்சுமி மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்தப் புதிய அமைப்பைத் தொடங்கி வைத்தார். வீரப்பன் நினைவு தினத்தையொட்டியார் யார் சமாதிக்கு வருகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக உளவுப் போலீசார் பெருமளவில் அப் பகுதியில் நடமாடினர்.
அங்கு வந்தவர்களை படம் எடுத்ததோடு, அவர்களது விவரங்களையும் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த் தீவிரவாதிகள் வந்ததாகக்கூறியும், அவர்களோடு முத்துலட்சுமிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறியும் விரைவில் அவர் உள்ளே தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வேலை சேலம் போலீசார் வசம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே முத்துலட்சுமிக்கு எதிராக தடா தங்கவேலு என்பவர் களம் இறங்கியுள்ளார். தடா தங்கவேலு கொளத்தூரைச் சேர்ந்தவர்.வீரப்பனுக்கு உதவியதாக கூறி இவரை கர்நாடக போலீஸார் கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நிபந்தனைஜாமீனில் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின்னர் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்திவருகிறார் தங்கவேலு.
இந்த அமைப்பின் சார்பில் கொளத்தூரில் வீரப்பன் நினைவு நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அனைவரும் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்கள்.
இக் கூட்டத்தில் முத்துலட்சமியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துலட்சுமியின் அமைப்பு அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்குப் பாதகமாக அமையும். எனவே முத்துலட்சுமியின் இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும்.
முத்துலட்சுமியைக் கைது செய்ய வேண்டும். அவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்குவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த தடா தங்கவேலுவை உளவுப் பிரிவினர் தான் இயக்குவதாக முத்துலட்சுமி தரப்பு சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications