கராத்தே தியாகராஜன் மீது பெண் புதிய புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டிக் காலி செய்ய வைத்ததாக சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் மீதுபுதிய புகார் வந்துள்ளது. இந்த புகாரின் கீழ் கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கராத்தே மீது புதிய புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். அவர் குடியிருந்த கட்டடத்திற்கு கராத்தே தியாகராஜன் வந்து மிரட்டி அவரைக் காலி செய்யவைத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கட்டடத்தை திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ரவி வாங்கியுள்ளார். திமுகவைச் சேர்ந்தமுக்கியமான பெண் புள்ளிக்காக பினாமியாக ரவி பெயரில் அந்தக் கட்டடம் வாங்கப்பட்டுள்ளது.

அப்போது அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டுள்ளனர். அதற்கு கராத்தேவின்செல்வாக்கை ரவி பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் (அவர்தான் கட்டடத்திற்குச் சொந்தக்காரர்என்று கூறப்படுகிறது) தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவி மீது புகார் கொடுத்துள்ளார்.

வலுக்கட்டாயமாக காலி செய்ய வைத்த சம்பவத்தில் கராத்தேவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைத் தெரிந்து கொண்டபோலீசார் (அப்போது அவர் போயஸ் கார்டனுக்கு நெருக்கமாக இருந்தார்) ரவி மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில்வரவழைத்து சமரசம் பேசி அப்படியே அமுக்கி விட்டனர்.

தற்போது கராத்தேவுக்கு நேரம் சரியில்லாத காரணத்தால் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து கராத்தேவுக்கு எதிராக புதியபுகாரை போலீஸாரே கேட்டு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்தப் புகாரை வைத்து முதலில் கராத்தேவை உள்ளே தள்ள வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துவரிசையாக பல்வேறு வழக்குகள் அவர் மீது பாயுமாம்.

கராத்தே ஆதரவாளரின் மனைவி வழக்கு:

இதற்கிடையே, கராத்தே தியாகராஜன் எங்கே என்று கேட்டு போலீஸார் தன்னைத் தொந்தரவு செய்வதாகக் கூறி சென்னைஉயர்நீதிமன்றத்தில், கராத்தே தியாகராஜனின் ஆதரவாளரின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த லதா என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், எனது கணவர், இன்டீரியர் டெகரேஷன்தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும், கராத்தே தியாகராஜனுக்கும் தொழில்முறையில் தொடர்பு உள்ளது.

எனது கணவர் தற்போது வெளியூர் சென்றுள்ளார். இந் நிலையில் போலீஸார் எனது வீட்டிற்கு வந்து கராத்தே தியாகராஜன் எங்கே,எனது கணவர் எங்கே என்று கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.

கராத்தே தியாகராஜன் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது என பலமுறை கூறியும் போலீஸார் தொடர்ந்து தொந்தரவுசெய்கிறார்கள்.

கடைசியாக அவர்கள் வந்தபோது, கராத்தே தியாகராஜன் எங்கே என்று கூறாவிட்டால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்என்றும் எச்சரித்தனர்.

எனவே விசாரணை என்ற பெயரில் போலீஸார் எங்களை தொந்தரவு செய்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தமனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+