4 ஆண்டுகளில் 4வது அரசு வழக்கறிஞர் நியமனம் !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் நியமிக்கப்படும்நான்காவது அரசு வழக்கறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவர். பொதுவாக இவர்கள்அடிக்கடி மாற்றப்பட மாட்டார்கள்.

ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த அமைச்சர்களை மாற்றுவது போல இதுவரை 3 பேர் அரசு வழக்கறிஞர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நான்காவது முறையாக புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இருந்த அரசு வழக்கறிஞர்கள் 3 பேரும் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இந் நிலையில் தற்போது இருந்து வந்து துரைசாமியும் ராஜினாமா செய்து விடவே, புதிய அரசு வழக்கறிஞராகஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு வழக்குகளில் போலீஸார் போதிய அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி துரைசாமி பதவிவிலகினார் என்பது நினைவிருக்கலாம். இவர் ஜெயேந்திரருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தவர் ஆவார்.

புதிய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரானவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+