தலைமை நீதிபதியாக 23ல் ஷா பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷா வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவிஏற்கிறார்.

தலைமை நீதியாக பணியாற்றி வந்த மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகமாற்றப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என். தினகர்நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளியூரில் உள்ள தமிழக கவர்னர் பர்னாலா இன்று (வியாழக்கிழமை) சென்னை திரும்புகிறார்.எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய நீதிபதிக்கு பதவி ஏற்பு விழா நடத்த நீதித்துறை வட்டாரம் முடிவுசெய்துள்ளது.

மேலும் இந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் சில புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+