சங்கரராமன் வழக்கு: புதுவைக்கு மாற்ற அரசு கோரிக்கை
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாக இருந்தால் அதை பாண்டிச்சேரிக்கு மாற்றவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கை தமிழக நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் சார்பில்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு மீது கடந்த முறை நடந்த விசாரணையின்போது, தமிழக நீதிமன்றங்களில் உள்ள நடைமுறை, விடுமுறை காலநீதிபதியின் முன்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமா (இந்தக் கொலை வழக்கில் விடுமுறை நாளில் மிக அவசரமாககுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது) என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை தினத்தில் ஏன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்தார், அன்று ஏன் அவசரமாக குற்றப் பத்திரிக்கை தாக்கலானது,மாஜிஸ்திரேட் நிர்பந்திக்கப்பட்டாரா என தமிழக அரசுக்கு பல கேள்விகளை தலைமை நீதிபதி கிளப்பினார்.
இந்த வழக்கில் தன் மீது முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட கவனம் செலுத்துவதால் தமிழகத்தில் விசாரணை நடந்தால் நியாயம்கிடைக்காது என ஜெயேந்திரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி, நீதிபதி ஜி.பி. மாத்தூர்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சங்கரராமன் கொலை தொடர்பான வழக்குகளை வேறு மாநிலத்துக்குமாற்றுவதாக இருந்தால் அவற்றை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்றார்.
ஆனால், ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் இதனை எதிர்த்தார். வழக்கை காஞ்சிபுரம்மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஆந்திராவின் சித்தூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
சங்கரராமனின் மனைவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கூடாது என்றுவாதாடினார். வழக்கில் பெரும்பாலான ஆவணங்கள் தமிழில் உள்ளன. மேலும் சாட்சிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றினால் குழப்பங்கள் ஏற்படும் என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications