கேரளா: தமிழக பஸ்சுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கொச்சி:
கொச்சியிலிருந்து கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு, தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று கிளம்பியது.பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், பஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தமிழகபேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட பேருந்து எர்ணாகுளம் வந்தபோது அங்குபேருந்து நிறுத்தப்பட்டு அனைத்துப் பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் மூலம் பேருந்து முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும்சோதனைக்குள்ளாக்கப்பட்டன. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
கடந்த மாதம் கொச்சி அருகே ஒரு தமிழக அரசுப் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. நினைவுகூறத்தக்கது. அதே போல மேலும்இரு தமிழக பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்களும் நடந்தன.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைப்பட்டுள்ள, அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள் தான் இந்தச்செயல்களைச் செய்தது தெரியவந்தது.
இந் நிலையில் தற்போதைய வெடிகுண்டு மிரட்டலை, போலீஸார் சாதாரண புரளியாக எடுத்துக் கொள்ளவில்லை.
சம்பந்தப்பட்ட பேருந்துக்கு தமிழக எல்லை வரை கேரள போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
அதேபோல கேரளாவுக்குள் இயங்கும் தமிழகப் பேருந்துகள் அனைத்துக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கிய பேருந்து நிலையங்களில், போலீஸார் கண்காணிப்பையும் அதிகரித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications