அய்யரின் அட்வைஸ்: பெண்கள் கொதிப்பு
சென்னை:
பெண்கள் சேலை எடுப்பது, சினிமாவுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டால், கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியும் என்றுபேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யரைக் கண்டித்து சென்னையில் பெண்கள் அமைப்பினர் உருவபொம்மை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, கேஸ் விலை உயர்வை சமாளிக்கமுடியவில்லை என்று பெண்கள் கூறக் கூடாது.ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களும், சினிமாவுக்குப் போவதையும், சேலைகள் எடுப்பதையும் குறைத்துக் கொண்டால்தாராளமாக கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியும் என்று மண்டைக்கனத்துடன் கூறியிருந்தார்.
அய்யரின் இந்தப் பேச்சு பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெண்கள்அமைப்பு ஒன்று இன்று காலை மணிசங்கர அய்யரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்துப் போராட்டம் நடத்தியது.
போராட்டத்தில் பங்கேற்ற வசந்தா என்ற பெண் கூறுகையில், நாங்கள் தினசரி சினிமாவுக்குப் போவதில்லை, தினமும் புடவைஎடுப்பதில்லை. எப்போதாவதுதான் சினிமாவுக்குப் போகிறோம், விசேஷம் என்றால்தான் புடவை எடுக்கிறோம்.
நாங்கள் சாதாரண புடவையைத்தான், அதுவும் பேரம் பேசித்தான் வாங்குகிறோம். மணிசங்கர் அய்யர் போன்ற பெரியமனிதர்களின் வீடுகளில் சாதாரணமாகவே பட்டுப் புடவைதான் எடுப்பார்கள்.
நாங்கள் அதிகம் செலவு செய்வதில்லை, அய்யர் போன்ற பெரிய மனிதர்களுக்குத் தான் ரொம்ப செலவாகும்.
சாதாரண சேலை எடுப்பதையே அதிக முறை யோசித்து எடுக்கும் எங்களைப் பார்த்து புடவை எடுப்பதை நிறுத்து, சினிமாபார்ப்பதை நிறுத்து என்று மணிசங்கர அய்யர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார் காட்டமாக.
பெண்களைப் பற்றித் தப்பாகக் கூறப் போய் குஷ்பு சமீபத்தில் படாதபாடு பட்டார். இப்போது தமிழக பெண்களைஉசுப்பேத்தியிருக்கிறார் அய்யர்.
இது தேவையா மிஸ்டர் மணி?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications