மீனாட்சி மாயமான வழக்கு: சிபிஐக்கு போகிறது?

Subscribe to Oneindia Tamil

குளித்தலை:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி மாயமாகி 1 ஆண்டு முடிந்தும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை, இதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது இதனால் சிபிஐ விசாரணை கேட்டு விரைவில் மனுதாக்கல்செய்ய உள்ளதாக அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருவது குளித்தலை ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு.இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பணிக்கம்பட்டியில் உள்ள பள்ளிக்கு மொபட்டில் சென்றவர்மீண்டும் வீடு திரும்பவில்லை.

இவரது கணவர் ஜோதி ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். மனு ஏற்கப்பட்டு முதல் கட்ட விசாரணை கடந்த 2004ம் ஆண்டு 14ம் தேதி தொடங்கியது.

போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஜனவரி 5ம் தேதி வழக்கு சிபிசிஐடி வசம்ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசாரும் குளித்தலையில் முகாமிட்டு உர வியாபாரத்தில் ஜோதி ராமலிங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டம்,சக ஆசிரியர் ஒருவருக்கு மீனாட்சி ரூ. 50,000 கடன் கொடுத்த பிரச்சினை, கூலிப்படையினர் கைவரிசை என்றுபல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

மீனாட்சி மாயமானதில் குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், மைத்துனர் மகன்ரங்கநாதன், இவருடைய உறவினர் ராஜா ஆகியோர் மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்து வருகிறது.

ஆனால், இவர்களை ஒப்புக்கு விசாரித்துவிட்டு விட்டுவிட்டனர் தமிழக போலீசார். இதற்காக நீதிமன்றத்திடம்கண்டனமும் பெற்றனர்.

இதையடுத்து இந்த மூவரிடமும் மீனாட்சியின் கணவர், மீனாட்சியுடன் பணிபுரிந்த சக ஆசிரியர் ஆகியஇருவரிடமும் உண்மை கண்டறியும் நார்கே அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட்டது.

எம்.எல்.ஏ பாப்பாசுந்தரத்திற்கு சென்னையில் பிரைன் மேப்பிங் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரைஎந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை.

வழக்கு அப்படியே ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே மீனாட்சியே தனது கணவருக்கு எழுதியதாக ஒரு மர்ம கடிதம் வந்தது. இந்த கடிதத்தை சிபிசிஐடிபோலீசாரே போலியாக எழுதியாகவும் ஒரு புகார் உள்ளது.

இது குறித்து மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் கூறுகையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்று 10மாதங்கள் ஆகின்றன. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் எனது குடும்பம் சீரழிந்துவிட்டது.வியாபாரமும் நலிவடைந்து விட்டது. இதனால் இந்த முறை சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதி நீதிமன்றத்துக்கு வருகிறது.

இப்பொது அளிப்பது தான் கடைசி வாய்ப்பு. இந்த முறையும் வழக்கில் முன்னேற்றம் இல்லை என்றால் சிபிஐக்குவழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிப்பேன் என ஏற்கனவே நீதிபதி ற்ேகனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+