போலீசார் குறைகளை தீர்க்க தனி டிஜிபி!!
சென்னை:
போலீசாரின் குறைகளை தீர்ப்பதற்காகவென்றே ஒரு கூடுதல் டிஜிபியை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்முதல்வர் ஜெயலலிதா.
காவல்துறைக்கு எப்போதுமே முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட கவனிப்பு உண்டு. ஆனாலும் தமிழகபோலீசார் கடந்த சில ஆண்டுகளாக அரசு மீது அதிருப்தியில் தான் உள்ளனர். தங்களுக்கு பதவி உயர்வுவழங்கப்படுவதில்லை, அதிகாரிகளுக்கு மட்டும் அவ்வப்போது பதவியுயர்வு வழங்கப்படுகிறது.போலீசாருக்கு பயணப்படி போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை. பல இடங்களில் பழைய குடியிருப்புகளேஉள்ளன. குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
சிறு தவறு செய்தால் கூட தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனையால், சம்பள உயர்வு, பதவி உயர்வுதடைபட்டு விடுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் தீர்வு காணப்படுவதில்லை என்று போலீசார்மனக் குமுறலுடன் உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் 10,000 பேரிடம் முதல்வர் ஜெயலலிதாகுறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றார். அதில் பெரும்பான்மை மனுக்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
பரவலாகவே போலீசார் அதிருப்தியுடன் இருப்பதாக உளவுத்துறை சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு தகவல் தந்ததாம்.தேர்தல் வரும் நேரத்தில் போலீசாரின் ஆதரவு முக்கியம் என்பதால், அவர்களது குறைகளைத் தீர்க்கபொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள தங்கராஜை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்டந்தோறும் போலீசாரின் குறைகளை கேட்டு வரும்டிசம்பர் மாதத்துக்குள் டிஜிபி அலெக்சாண்டரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமாம்.
அதன் அடிப்படையில் போலீசாருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications