அன்னிய செலாவணி மோசடி: சசிக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அன்னியச் செலவாணி மோசடி வழக்கில் 5 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர்ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவுக்கும் அவரது அக்காள் மகன் பாஸ்கரனுக்கும் உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் சசி அண்ட் கோ ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்தனர். மத்தியநிதியமைச்சகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஹவாலா முறையில் இந்த முதலீடுகள் வெளிநாடுகளுக்குப்போயின.

இதையடுத்து அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 7 அன்னியச்செலாவணி மோசடி வழக்குகள் பதிவாயின.

இந்த நிலையில் அன்னியச் செலவாணி ஒழுங்குமுறை சட்டம், அன்னியச் செலவாணி மேலாண்மை சட்டமாகமாற்றியமைக்கப்பட்டது. இதனால் அன்னியச் செலவாணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தங்கள் வழக்குகளைவிசாரிக்க முடியாது என சசிகலா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் அன்னியச் செலவாணி சட்டம் மாற்றியமைக்கப்பட்டாலும்,அன்னியச் செலவாணி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என்று டெல்லியில்உள்ள அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குனருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மோசடி வழக்குகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி, சசிகலா, பாஸ்கரன்ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந் நிலையில் மொத்தமுள்ள 7 வழக்குகளில் 4 வழக்குகளில் மட்டுமே தங்களுக்கு உரிய ஆவணங்கள்வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3 வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் வழங்காமல், அவ் வழக்குகளில்பதில் மனுக்கள் தாக்கல் செய்ய இயலாது என்றும் சசிகலாவும், பாஸ்கரனும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இம் மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன் 3 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சசிகலா,பாஸ்கரனுக்கு வழங்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

மேலும் 5 வாரங்களில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சசிகலா, பாஸ்கரன்அகியோருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்மூலம் சசி அண்ட் கோ மீது நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த அன்னிய செலாவணி மோசடிவழக்குகள் மீண்டும் உயிர் பெறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+