எஸ்ஆர்பி வீட்டு கொள்ளை: காங் போராட்டத்திற்கு போலீஸ் தடை
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணிம் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக உரிய விசாரணைநடத்தாததைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
எஸ்.ஆர்.பியின் சென்னை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. இது அதிமுக தலைமையின் ஆசியுடன்போலீசாரின் முழு உதவியுடன் நடந்த திருட்டு என்றும், தனது வீட்டில் இருந்த ஆவணங்களை எடுக்கவே திருடர்கள்வந்ததாகவும் எஸ்.ஆர்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் கொள்ளை தொடர்பாக போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ்சார்பில் இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. சென்னை நகரில் போராட்டம்,ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்த வேண்டுமானால், 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோர வேண்டும்.
ஆனால் காங்கிரஸார் நடத்தவுள்ள போராட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.எனவே அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறை மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்த வேண்டும் என எஸ்.ஆர்.பி, வட சென்னை மாவட்டத் தலைவர் ராயபுரம்மனோ, மத்திய சென்னை மாவட்ட தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் வாசனிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் வரவில்லை. அவர்இளங்கோவன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இளங்கோவனுக்கும் எஸ்ஆர்பிக்கும் ஆகாது என்பது உங்களுக்குத்தெரியுமே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications