புத்தக பையில் சாராயம் கடத்திய மாணவர்கள்!!
கடலூர்:
புத்தகப் பையிவ் சாராயம் கடத்திய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை வடக்கு மண்டல ஐஜியான ஜாங்கிட் தனது தீவிரமான முயற்சிகளால் அவ்வப்போது ஒடுக்கி வந்தாலும் சாராய கும்பல்கள் மீண்டும் தலைதூக்கிய வண்ணம் உள்ளன.இந் நிலையில் சாராயக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டிஐஜி சஞ்சய் அரோராவுக்கு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கடலூர் எஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான டீம் கள்ளச் சாராய கும்பல்களை ஒடுக்க ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது புதுவையில் இருந்து இந்தச் சாராயம் கடலூருக்குள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து வாகன சோதனைகளைத் தீவிரமாக்கி கள்ளச் சாராய கும்பல்களுக்கு செக் வைத்தனர் போலீசார்.
இந் நிலையில் தான் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி சாராயம் கடத்தும் வேலையில் அந்தக் கும்பல்கள் இறங்கின. கடலூர்-பாண்டிச்சேரி எல்லையில் வண்டிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் பஸ்களில் எல்லை கடந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பைகளில் சாராய பாக்கெட்டுகளை வைத்து கடலூருக்கு அனுப்பி வந்துள்ளனர்.
சீருடையில் வந்த அந்த மாணவர்களை யாராலும் சந்தேகிக்க முடியவில்லை.
சாராயம் எப்படி வருகிறது என்று தெரியாமல் அல்லாடிய போலீசார் உளவுப் போலீசாரின் உதவியை நாடினர். உளவுப் படையினர் எல்லைப் பகுதியில் கண்காணித்தபோது தான் பஸ்களில் வரும் பள்ளி மாணவர்களின் பைகளில் சாராயம் கடத்தப்படுவது தெரியவந்தது.
அந்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான டீம் நேற்று மடக்கிப் பிடித்தது. கார்த்திக் (வயது 13), சிவமூர்த்தி (12), சதீஷ் (12), மணி (14), சின்னராஜ் (12) ஆகிய அந்த மாணவர்களின் புத்தகப் பைகளில் தலா 2 லிட்டராக மொத்தம் 10 லிட்டர் சாராயம் இருந்தது.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அழுதபடியே தந்த தகவல்களை வைத்து
கள்ளச் சாராய கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாணவர்கள் பிடிபட்ட விவரம் அறிந்து அக் கும்பல் தலைமறைவாகிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications