விஸ்வரூபமெடுக்கும் நில மோசடி:ரூ. 100 கோடி ஸ்வாகா- விசாரணைக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிலமோசடிகள் குறித்து தீவிரமாக விசாரிக்கமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அருகே கொளத்தூரில் அரசு ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியும், மற்றவர்களுக்குத் திருட்டுப்பட்டா மூலம் விற்பனையும் செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தியபோது முன்னாள் துணை கலெக்டர் ஒருவரும் மேலும் 5 வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இந்த நிலமோசடியில் தொடர்பு இருப்பது உறுதியானது.
மேலும் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இந்த நில மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் கைதாகியுள்ள துணை கலெக்டர் சண்முகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும்சென்னையில் பணியாற்றியுள்ளார்.
எனவே அந்த மாவட்டங்களிலும் அவர் நில மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. இதற்கிடையே சண்முகம்மீது ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதாகவும் அரசின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியபோது பிற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ. 100 கோடிக்கும் அதிகமானஅளவுக்கு அரசு நிலத்தை பட்டா போட்டு தனியாருக்கு விற்றிருப்பதாகவும் தெரிகிறது.
எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களிலும் நடந்த நிலமோசடிகள் குறித்து மிகவும் விரிவானவிசாரணை நடத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் மேலும் பல அதிகாரிகள் போலீஸ் வலையில் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஏரி, குள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. இந்த வேலையில் அரசு இறங்கியபோது தான்ஏரிகளையே அதிகாரிகள் பட்டா போட்டு தனியாருக்கு விற்றிருப்பது தெரிய வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications