ஜெயலட்சுமியும், சத்திய சோதனையும்!
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகஜால ஜெயலட்சுமி, இப்போது மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனைபுத்தகத்தைப் படித்து வருகிறாராம்.
திண்டுக்கல் ஆயுதப்படை டி.எஸ்.பியாக இருந்த ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்ராஜசேகரும், ஜெயலட்சுமியும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜசேகரால்தான் இந்த நிலைக்கு ஆளோனோம் என்று சிறையில் புலம்பி வரும் ஜெயலட்சுமி,தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களிடம் தன்னை சீக்கிரம் ஜாமீனில் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சி வருகிறாராம்.
இது மட்டுமல்லாது, சிறையில் பொழுதைக் கழிப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், தனது வீட்டில் இருந்த சத்திய சோதனைபுத்தகத்தை வழக்கறிஞர் மூலம் எடுத்து வரச் செய்து தினமும் அதைப் படித்து வருகிறாராம்.
ஜெயலட்சுமியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரும் மனு அடுத்த வாரம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜசேகரனின் மனு தள்ளுபடி
இதற்கிடையே ஜாமீன் கோரி ராஜசேகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஏற்கனவே அவரது மனுவை திண்டுக்கல் செசன்ஸ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செசன்சு நீதிமன்றத்தில் ராஜசேகர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications