குமுதம் பத்திரிக்கை மீது பாமக வழக்கு
சென்னை:
குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் மீது பாமக தலைவர் ஜி.கே.மணி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் சுனாமி நிவாரண நிதிக்காக, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வழங்கிய நிதியில் ரூ. 63 கோடியை பாமக நிறுவனரின் மகனும், மத்திய சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்முடக்கி வைத்து, சுருட்டி விட்டதாகக் கூறப்பட்டிருந்தது.இது அவதூறான, பொய் செய்தி என பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், குமுதம் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து பாமக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு அஜதூறு வழக்குத்தொடர்ந்துள்ளார்.
அதில், உண்மைக்கு மாறாக அமைச்சர் அன்புமணியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான செய்தியைவெளியிட்ட குமுதம் ப்போர்ட்டர் இதழின் நிறுவனர், ஆசிரியர், பதிப்பாளர், நிருபர், வெளியீட்டாளர் உள்ளிட்ட 10 பேர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
7 பிரிவுகளின் கீழ் குமுதம் குழுவினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி மகராஜன்,வரும் நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும்உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications