ரூ. 400 கோடிக்கு மில் வாங்கிய மாஜி சபாநாயகர், சிவசேனை தலைவர்
மும்பை:
மும்பையில் மூடப்பட்ட ஜவுளி ஆலையை ரூ. 400 கோடி கொடுத்து சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் சகோதரி மகன் ராஜ்தாக்கரேவும், அம் மாநில முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் மனோகர் ஜோஷியும் வாங்கியுள்ளனர்.
இதை வாங்க இவர்களுக்கு நிதியுதவி செய்த ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைநடத்தியுள்ளனர்.சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே ஏகத்துக்கும் சொத்து குவித்திருப்பதாக சமீபத்தில் அக் கட்சியில் இருந்து விலகிய மூத்ததலைவரான ரானே குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் மூடப்பட்ட மும்பை கோகினூர் ஜவுளி ஆலையை அதன் நிலத்துடன் சேர்த்து ராஜ் தாக்கரேவும் ஜோஷியும் சேர்ந்துரூ. 400 கோடிக்கு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு பொதுத்துறை நிதிநிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் இந்தக் கடனை வழங்கியுள்ளது தெரிய வந்தது.
எந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வளவு பெரிய நிதி கடனாக வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. வெளிநாட்டில்இருந்து முறைகேடாக இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்ட பணமாக இது இருக்கலாம் என்றும் வருமான வரித்துறைசந்தேகிக்கிறது.
இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்ட் நடத்தியுள்ளது.
பாஜக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications