குறள் வழி வாழ்வோருக்கு ஸ்ரீராம் நிறுவனத்தின் அறம் விருது!
சென்னை:
திருக்குறளில் காட்டப்பட்டுள்ள நெறிகளின்படி வாழ்வோருக்கு ஸ்ரீராம் குழுமம் வழங்கி வரும் அறம் விருதோடு இனிமேல் ரூ. 1லட்சம் பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் வழி நடப்போருக்கு கடந்த இரண்ட ஆண்டுகளாக அறம் விருதினை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கி வருகிறது.தற்போது 3வது ஆண்டாக இந்த விருதை வழங்கவுள்ளனர்.குறள் காட்டும் வழியில் கலை, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் நெறிகளைத் தேர்ந்தெடுத்து, ஏதேனும் ஒரு துறையில்அச்சிந்தனையுடன் வாழ்வோருக்கு இந்த அறம் விருது வழங்கப்படும்.
இவ்விருது பெறத் தகுதியுடையோர் அவர்களாக விண்ணப்பிக்கக் கூடாது. அவர்களது சிறப்புகளை விளக்கி சமுதாயத்தில் நன்குஅறிமுகமான இருவர் பரிந்துரைக்க வேண்டும்.
முழு வெள்ளைத் தாளில் 2 பக்கங்களுக்கு மிகாமல் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தை ஸ்ரீராம் இலக்கியக்கழகம், ஐந்தாவது தளம், 149, கி.ம்ஸ் சாலை, சென்னை - 600 006 என்ற கவக்கு நிவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 50 வயதுக்கு மேற்பட்டவராக, இந்தியராக, இந்தியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும் என்பதுமுக்கியம்.
விருது பெறத் தகுதியுடையவர்களை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்துஅறிவிக்கும். இந்த ஆண்டு முதல் அறம் விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசுப் பணமும் வழங்கப்படும் என ஸ்ரீராம் இலக்கியக் கழகம்அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications