கருணாநிதியை கண்டித்து மாணவர்கள் போஸ்டர்!
சென்னை:
திமுக தலைவர் கருணாநதியை கடுமையாக கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் சென்னை நகரின்பல்வேறு கல்லூரிகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் சுய நல எண்ணம் கொண்டிருக்கிறார்கள், லட்சியம் இன்றிஇருக்கிறார்கள், பணம், பதவிக்காக அலைகிறார்கள் என சமீபத்தில் முரசொலியில் எழுதிய ஒரு கட்டுரையில்கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.இதற்கு கல்லூரி மாணவர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கருணாநிதியைக் கண்டித்து அனைத்துக் கல்லூரிமாணவர் பேரவை அமைப்பாளர் பாலசுப்ரமணியன் அறிக்கையும் வெளியிட்டார்.
இந் நிலையில் இன்று சென்னை நகரின் முக்கியக் கல்லூரிகளின் சுவர்களில் கருணாநிதியை கடுமையாககண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
மகனை முதல்வராக்குவதற்கு மதம் பிடித்து அலையும் கருணாநிதியே என்று விளித்து சுவரொட்டி வாசகங்கள்கடுமையாக இருந்தன. அவற்றை சில கல்லூரிகளின் சுவர்களிலிருந்து போலீஸார் அகற்றினர்.
ஆனால் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விட்டு விட்டனர்.
இதற்கிடையே கருணாநிதி மாணவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில்குதிக்க நேரிடும் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications