இதுதாம்ப்பா காமராஜர் ஆட்சி!! எஸ்.வி.சேகர்
குமாரபாளையம்:
காங்கிரஸ் கட்சியினரால் அமைக்க முடியாத காமராஜர் ஆட்சியை தற்போது
அம்மா (ஜெயலலிதா) நடத்தி வருகிறார் என அதிமுக பேச்சாளரும், நாடக நடிகருமான எஸ்.வி.சேகர்கூறியுள்ளார்.குமாரபாளையத்தில் நடந்த அதிமுக 34வது ஆண்டு விழா சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
கருணாநிதிக்கு இந்துக்களை கேலி, கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. இஸ்லாமியர்களின் இப்தார்விருந்துக்கு சென்று கஞ்சி குடிப்பார், கிறிஸ்தவர்கள் கொடுப்பதையும் சாப்பிடுவார். ஆனால் விநாயகர் சதுர்த்திகொழுக்கட்டையை மட்டும் சாப்பிட மாட்டார், மாறாக கேலி செய்வார்.
நான் இதுவரை எந்தக் கட்சியிலும் சேர்ந்ததில்லை, அதிமுகவைத் தவிர. கடைசி வரை அதிமுகவில்தான்இருப்பேன். அம்மாவின் சாதனைகள் வியக்கத்தக்கவை. அதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போய்த்தான்அதிமுகவில் சேர்ந்தேன்.
திமுகவில் யாருக்கும் மரியாதையில்லை. ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை, கடைசி நிலைத் தொண்டன் முதல்மேலே இருப்பவர் வரை ஒன்றுதான். அனைவருக்கும் சமமான மரியாதை கொடுக்கப்படுகிறது. (நம்ம கராத்தேமாதிரியோ!!!).
100 சதவீதம் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு அமைச்சர் பதவி உள்பட உயர் பதவிகளைத் தரதாயுள்ளம் கொண்ட முதல்வரம்மா தயங்கியதே இல்லை.
அம்மா கொடுக்கும் மரியாதையைப் பார்த்து யாராவது தவறு செய்ய முயன்றால் உடனடியாக அவர்களைக்கண்டித்து, தண்டிக்கவும் அம்மா தவறியதில்லை. சமீபத்தில்கூட இப்படித் தப்பு செய்ததால்தான் கராத்தேதியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கினார்.
காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்கின்றனர். உண்மையில் அவர்களால் காமராஜரின்ஆட்சியை அமைக்கவே டியாது. ஆனால் முதல்வர் அம்மா அதை சாதித்துக் காட்டி விட்டார். இப்போது நடந்துவருவது காமராஜர் கனவு கண்ட ஆட்சிதான்.
மாணவ, மாணவியருக்கு பிளஸ்டூ வரை இலவச சைக்கிள், தரமான சத்துணவு, கல்வி நிதியுதவிகள்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்கு தடையில்லாத குடிநீர்வினியோகம், வீரப்பனை சுட்டுக் கொன்று பல லட்சம் மக்களுக்கு மன நிம்மதி என பல்வேறு சாதனைகளை செய்துகாமராஜர் ஆட்சியை கொண்டு வந்து காட்டியுள்ளார் புரட்சித் தலைவி.
தனது குடும்பத்தில் யாராவது பதவிக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிக்கலாம் என்று முன்பு ராமதாஸ்கூறினார். இப்போது அவரது மகன் மத்திய அமைச்சராக உள்ளார். அவரை யார் போய் சவுக்கால் அடிப்பது?என்றார் சேகர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications