பாலுவுக்காக தயாரிப்பாளரை கடத்திய பாலா
சென்னை:
இயக்குனர் பாலு மகேந்திரா தன்னை கடத்தி, மிரட்டியதாக அது ஒரு கனாக்காலம் படத்தின் தயாரிப்பாளர் சாய் சிதம்பரம் புகார்கூறியுள்ளார்.
தனுஷ், ப்ரியாமணி நடித்து, பாலுமகேந்திரா இயக்கியுள்ள படம் அது ஒரு கனாக்காலம். இப் படத்தில் பணியாற்றிய பலருக்கும்,தயாரிப்பாளர் சாய் சிதம்பரம் சம்பளப் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் அவர் சம்பளப் பாக்கியைத் தரவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து இருவருக்கும்பிரச்சினை இருந்து வருகிறது.
தனது சம்பளப் பாக்கியை தராமல் படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி ஃபெப்சி மற்றும் காவல்துறையில் புகார் செய்துள்ளார்பாலு மகேந்திரா.
இந் நிலையில் சாய் சிதம்பரம், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இயக்குனர்கள்பாலா மற்றும் சீமான் ஆகிய இருவரும் ஜாபர்கான்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்தனர்.
பாலு மகேந்திரா என்னைக் கூப்பிடுவதாக கூறி வலுக்கட்டாயமாக அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். வட பழனியில்உள்ள பாலு மகேந்திராவின் அலுவலகத்திற்கு என்னைக் கொண்டு போனார்கள்.
அங்கு கால் மணி நேரம் கழித்து பாலு மகேந்திரா வந்தார். சம்பளப் பாக்கியை உடனே செட்டில் செய்யுமாறு அப்போது பாலுமகேந்திரா கூறினார். மேலும், எனது பேரனுக்கு பிறந்த வாழ்த்து தெரிவித்து போடப்பட்ட டைட்டில் கார்டை ஏன் படத்திலிருந்துநீக்கினீர்கள் என்றும் கேட்டார்.
தொடர்ந்து 3 பேரும் என்னை மிரட்டினர். இந் நிலையில் எனது அலுவலக ஊழியர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தகவல்கொடுத்ததால், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பாலு மகேந்திராவுக்கு போன் வந்தது.
என்னை உடனடியாக விடுவிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதால் பாலு மகேந்திராவும் பாலாவும் சீமானும் என்னைவிடுவித்தனர் என்று கூறியுள்ளார் சாய் சிதம்பரம்.
அது ஒரு கனாக்காலம் படத்தைத் தான் தனுஷ் மிகவும் நம்பியுள்ளார். எனவே இப்படத்தை எப்படியாவது வெளியிடவைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந் நிலையில், சாய் சிதம்பரம் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள திடீர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலு மகேந்திராவால் தான் இயக்குனர் பாலா சினிமாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே சிலகாலம் மோதல் இருந்து வந்தது. இப்போது பாலுமகேந்திராவுக்கு அனைத்து வகைகளிலும் பாலா உதவி வருகிறார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாலா தூரத்து உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications