அதிமுகவுக்கு ரூ. 1 கோடி நிதி: வருமான வரி சிக்கலில் மாஜி மந்திரி
சென்னை:
முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, அதிமுக தலைமைக் கழக கட்டட நிதியாக ரூ. 1 கோடி நிதி கொடுத்தது தொடர்பாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த சின்னச்சாமி, கட்சி கட்டிட நிதியாகரூ.1 கோடி வழங்கினார்.இது தொடர்பாக திருச்சி வருமான வரி அலுவலகம் சின்னச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவ்வளவு பெரியதொகை எப்படி வந்தது? என விளக்கம் கேட்கப்பட்டது.
இதை அந்தப் பணம் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு சின்னச்சாமிவிளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 25லட்சத்தை மட்டுமே பொது மக்களிடம் இருந்து அவர் வசூலித்ததற்கான ரசீதுகள் இருந்தன. மிச்சம் ரூ. 75 லட்சத்தை அவர் பொதுமக்களிடம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆனால், பல தவணைகளில் அவர் ரூ. 1 கோடி நிதியை அவர் கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருந்தற்கான ஆதாரங்களும்(ரசீதுகள்) சிக்கின.
இதையடுத்து கட்சிக்கு அளித்த நன்கொடையான ரூ. 1 கோடிக்கு ரூ. 31 லட்சம் வரி செலுத்த வேண்டும் எனஅவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து சின்னசாமி சென்னை வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணைநடத்திய தீர்ப்பாயம் சின்னச்சாமி ரூ. 31 லட்சம் வரி கட்ட தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து திருச்சி வருமான வரி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,சின்னச்சாமி தொழில் துறை அமைச்சராக இருந்த போது கிராணைட் குவாரி அனுமதி கொடுப்பதாக பல பேரிடம்பணம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இவ்வாறு பணம் கொடுத்த குவாரி உரிமையாளர் ஒருவரின் வாக்குமூலம் எங்களிடம் உள்ளது. இப்படி வசூலித்தபணத்திலிருந்து தான் கட்சி கட்டிட நிதிக்காக ரூ.1 கோடி கொடுத்துள்ளார்.
எனவே, அந்தத் தொகைக்கு வரி விதித்தது செல்லும். எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.தினகரன், கண்ணதாசன் முன் விசாரணைக்கு வந்தது.
திருச்சி வருமான வரி ஆணையர் சார்பாக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் முரளி குமார் ஆஜராகி வருமான வரிதரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.
இதனை அடுத்து பதில் மனு தாக்கல் செய்ய சின்னசாமிக்கு நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துவழக்கை ஒத்தி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications