ஜாமீன் கோரும் கராத்தே: புகாரை மறுக்கும் பெண்
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக இறங்கியிருப்பதால் முதல்முறையாக முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டியதாக கராத்தே மீது தேனாம்பேட்டைகாவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் அவரை முதலில் கைது செய்ய போலீசார்திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் அவர் மீது மேலும் பல வழக்குகள் அடுக்கப்படும் என்று தெரிகிறது.இந் நிலையில் கராத்தே தியாகராஜன் சார்பில் அவரது வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் (சங்கரராமன் கொலை வழக்கில் இவர்தான்ஜெயேந்திரருக்காக ஆஜராகி வருகிறார்) முன் ஜாமீன் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தி.நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவரைவீட்டைக் காலி செய்யும்படி நான் மிரட்டியதாக பொய்யான வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. இது பொய் வழக்காகும். இதில் என்னைபோலீஸார் கைது செய்யக் கூடும் என நினைக்கிறேண். இதனால் எனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்கராத்தே.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
புகாரே தரவில்லை: சகுந்தலா
இதற்கிடையே கராத்தே மீது நான் எந்தப் புகாரும் போலீசாரிடம் தரவில்லை என சகுந்தலா மறுத்துள்ளார்.
தி.நகர் விஜயராகவன் தெருவில் வசிக்கும் அவர் கூறுகையில், என் வீட்டை விற்றது தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன்ஏற்பட்ட பிரச்சனையில் கராத்தே தியாகராஜன் எனக்கு உதவி தான் செய்தார். அவர் உதவியால் தான் போலீசாரே அந்தவிவகாரத்தில் தலையிட்டனர். எனக்கு உதவி செய்த தியாகராஜன் மீது நான் எந்தப் புகாரும் தரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை கராத்தேவின் முன் ஜாமீன் மனுவுக்கு போலீசார் பதில் மனுதாக்கல் செய்தால் தான் இந்த விவகாரத்தில் தெளிவு ஏற்படும்.
அதே நேரத்தில் கராத்தே மீது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் போலீசார் டெல்லியில்தங்கியிருக்கும் கராத்தேவை அங்கு வைத்தே அமுக்கிப் பிடிக்க தனிப் படையை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications