குஷ்பு மீதான இன்னொரு வழக்கும் தள்ளுபடி!
பெரம்பலூர்:
![]() |
நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இளம் பெண்களின் கற்பு குறித்து பேசிய குஷ்புவைத் தண்டிக்க வேண்டும் என்று கோரி 25க்கும் மேற்பட்ட வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பல வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றங்கள் குஷ்புவுக்கு சம்மன்அனுப்பியுள்ளன.
சில நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் பெரம்பலூர் மாவட்ட பாமகபொருளாளர் கமலா மற்றும் மகளிர் அணிச் செயலாளர் பரமேஸ்வரி ஆகிய இருவரும் பெரம்பலூர் நீதிமன்றத்தில் குஷ்புவுக்குஎதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிராஜன், குஷ்பு மீது வழக்கு தொடருவதற்கு தேவையான முகாந்திரம் மனுவில்குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இதற்கிடையே சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் வருகிற 28ம் தேதி குஷ்பு ஆஜராக வேண்டும் என சம்மன்அனுப்பப்பட்டுள்ளது.
அம்பத்தூர் நீதிமன்றத்தில் கவுன்சிலர் லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரணீதரன்,வரும் 28ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் குஷ்பு நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications