ராகுல் காந்தியுடன் விஜய்குமார் ஆலோசனை
சென்னை:
தமிழக விஜயத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் வழியில், சென்னையின் பிரபல ஹோட்டலான சரவண பவனில்கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து டிபன் சாப்பிட்டு அனைவரையும் அசத்தினார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, திருச்சி, மதுரையில் சில நிகழ்ச்சிகளில்கலந்து கொண்டார்.அதை முடித்துக் கொண்டு சென்னைக்கு விமானத்தில் திரும்பினார். ராகுல்காந்தியும், அவரது நண்பர்கள் சிலரும்,பாதுகாவலர்களுடன் விமான நிலையத்தில் இருந்து காரில் கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. ராகுல்காந்தியின் கார் நேராக அசோக் நகரில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு வந்தது.
காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தியைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஹோட்டலும்,சுற்றுப்பகுதியும் பரபரப்பானது.
நேராக உள்ளே சென்ற ராகுல்காந்தி ஒரு டேபிளில் போய் அமர்ந்தார். அவருடன் வந்தவர்களும் அருகருகே அமர்ந்தனர்.
பின்னர் ஹோட்டல் மெனு கார்டை வாங்கி அதிலிருந்த பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக ஆர்டர் செய்தார் ராகுல்காந்தி. முதலில் தயிர்வடை வந்தது. அடுத்து காலிபிளவர் ரசம், கார தோசை வந்தது.
மிக மிக சாதாரணமாக ராகுல்காந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஹோட்டலில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்துடன்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ராகுல் காந்தி மிகவும் கேசுவலாக சாப்பாட்டை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்.
கார தோசையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் மகன் சரவணன்அங்கு வந்து தன்னை ராகுல் காந்தியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரிடம் காலி பிளவர் ரசம், தோசை அனைத்துமே அட்டகாசம் என்று பாராட்டினார் ராகுல்காந்தி. பிறகு ஜூஸ், ஐஸ்க்ரீம் எனசாப்பிட்டு முடித்த ராகுல், பில் கொடுக்குமாறு கேட்டார்.
ஆனால் அவரிடம் போய் எப்படி பில் கேட்பது என நினைத்த சரவணன், சித்தபடியே நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரைவிடாத ராகுல், பில் கொடுத்தால்தான் இடத்தைக் காலி செய்வேன் என்றார் தானும் சிரித்தவாறே.
பின்னர் பில் வந்தது. ரூ. 787 ரூபாய் அளவுக்கு ராகுல்காந்தியும், உடன் வந்தவர்களும் சாப்பிட்டிருந்தனர். அந்தப் பில்தொகையை கட்டிய ராகுல்காந்தி, மீண்டும் ஹோட்டல் ஊழியர்களிடம், சாப்பாடு நன்றாக இருந்ததாக பாராட்டி விட்டு கிளம்பிச்சென்றார்.
தனக்கு சர்வ் செய்த பேரரை மறந்துவிட்டதை உணர்ந்த ராகுல் திரும்பி வந்து, அவரிடம் கை குலுக்கிவிட்டு மிகச் சாதாரணமாககிளம்பிச் சென்றார்.
மீண்டும் விமான நிலையம் வந்த ராகுல்காந்தியை தமிழக அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்விஜயக்குமார் என்பது குறிப்பிடத்தத்தது.
இதனால் ராஜிவ் குடும்பத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. மேலும் ராஜிவ் தான் அவரை முதல்வரின் ஜெயலலிதாவின்பாதுகாப்புக்காக தமிழகத்துக்கு அனுப்பி வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications