வேலையை விட்டு போ..: டீனை மிரட்டிய ஷீலா
சென்னை:
தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்ட, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைடீன் டாக்டர் இளங்கோவனை மீண்டும் சென்னைக்கே மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக இருந்தவர் இளங்கோவன். இந்தப் பதவிக்கே அவர் மிக நீண்ட இழுபறிக்குப்பிறகுதான் நியமிக்கப்பட்டார். வேறு ஒருவருக்கு அந்தப் பதவியைத் தர திட்டமிட்டிருந்தனர். இந்த விஷயத்தில் லஞ்சம்விளையாடியதாகவும் கூறப்பட்டது.இதையடுத்து தனக்கு டீன் பதவி வழங்கக் கோரி அவர் தமிழக அரசு மீது நிர்வாக தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில்வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் எல்லாம் முடிந்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரி முதல் வாரம்தான் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிடீனாக அவர் நியமிக்கப்பட்டார். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த அக்டோபர் 13ம் தேதி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ஷீலா ராணி சுங்கத் என்னை தனதுஅலுவலகத்திற்கு கூப்பிட்டார்.
தேனியில் தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு போக விரும்புவதாக எழுதிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்.ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன். தேனி மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் அங்கீகாரமே கிடைக்கவில்லை. இந் நிலையில்நான் எப்படி அங்கு போக முடியும் என்று கேட்டேன்.
மேலும், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனது மகளுக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையும் கூறி நான் தேனிக்கு போக முடியாது என்று ஷீலா ராணி சுங்கத்திடம் தெரிவித்தேன்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த ஷீலா ராணி சுங்கத், அப்படியானால் பேசாமல் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விடுங்கள் என்று மிரட்டினார். இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
வீட்டிலும் மகளுக்கு உடல் நலம் சரியில்லை, அலுவலகத்திலும் இப்படிப்பட்ட நெருக்கடியா என்று வேதனை அடைந்த நான்,விருப்ப ஓய்வு கோரி அதே நாளில் விண்ணப்பித்தேன்.
ஆனால் அதையும் மீறி என்னை தேனி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்தது. இது எனக்கு அதிர்ச்சிஅளித்துள்ளது. என அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வேதனையுடன் தனது மனுவில் கூறியிருந்தார் இளங்கோவன்.
இந்த மனு நீதிபதி குலேசகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், நான்கு மாதகாலத்திற்கு மட்டுமே இளங்கோவன் தேனி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் மீண்டும்சென்னைக்கே மாற்றப்பட்டு விடுவார் என விளக்கினார்.
இதைக் கேட்ட நீதிபதி, 4 மாதங்களுக்குப் பிறகு இளங்கோவனை சென்னைக்கு மாற்றி விட வேண்டும் என்று கூறி மனுவை பைசல்செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications