அதிரடிப்படை லீக் செய்யும் வீரப்பன் கேசட்
சென்னை:
முத்துலட்சுமிக்கும் வீரப்பனுக்கும் இடையே கடைசி காலத்தில் நல்லுறவு இருக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அவன் முன்பு தனது மனைவி முத்துலட்சுமிக்குஅனுப்பிய கேசட்டில் இருந்த சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.முத்துலட்சுமிக்கு அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அது தெரியாமல் அவருக்கு வீரப்பன்அனுப்பிய 2 ஆடியோ கேசட்டுகள் நேராக அதிரடிப்படையினரின் கையில் சிக்கின.
அதில் இருந்த விவரங்களை இதுவரை அமுக்கி வைத்திருந்த அதிரடிப்படை இப்போது அதை கசிய விட்டுள்ளது.அந்தக் கேசட்டுகளில் தனது மனைவியை பற்றி வீரப்பன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளான்.
2001ம் ஆண்டு வீரப்பனிடம் இருந்து வந்த ஆடியோ கேசட்டில் உள்ள தகவல்களை பற்றி அதிரடிப்படை தரப்பில்கூறப்படுவதாவது:
முத்துலட்சுமிக்கு வீரப்பன் திட்டு:
வீரப்பன் அனுப்பிய முதல் கேசட்டில் முத்துலட்சுமியை கண்டபடி திட்டியுள்ளான்.
முத்துலட்சுமி, உன் கழுத்தில் தாலிகட்டிய புருஷன் பேசுகிறேன். இப்போது நீ கற்புள்ளவளாக இல்லை. உன்னைகெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் நீ மானமுள்ள பெண்ணாக இருந்தால் நான் கட்டிய தாலியை கழற்றி கொடுத்துவிட்டு நீ வக்கீலிடம் போ, போலீஸ் அதிகாரியிடம் போ, நடிகரிடம் போ, யாரிடமும் போ, ரத்தம் கொதித்துப்போய் நான் இப்படி பேசுகிறேன்.
இந்த கேசட்டில் உள்ள பேச்சை கேட்ட பிறகு நீ உயிரோடு இருக்கக் கூடாது. செத்துப்போ.
நான் பொம்ளைங்களை கொல்லமாட்டேன். இல்லாவிட்டால் நானே உன்னை சுட்டுக் கொன்று விடுவேன். நான்சொன்னால் போதும் உன்னை கொல்வதற்கு என் ஆட்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு வீரப்பன் கூறியுள்ளான்.
இந்த கேசட்டை கொண்டு வீரப்பனை பிடிக்க திட்டமிட்ட போலீசார் பதில் கேசட் தயார் செய்தார்கள். அதில்முத்துலட்சுமியை பேசவைத்து வீரப்பனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
என் ஆச ராசாவே...
அதில் முத்துலட்சுமி பேசியதாவது:
நீங்கள் என்னை சந்தேகப்படுவது தாயை சந்தேகப்படுவதற்கு சமம். என் ஆசை ராசவே.. உங்கள் கையால் நான்சாக ஆசைப்படுகிறேன். நான் எங்கே வர வேண்டும் என்று சொல்லுங்கள் அங்கே வருகிறேன். உங்களை மணந்துஇதுவரை எந்த சுகத்தையும் நான் பெறவில்லை.
என்னை விட உங்கள் அண்ணியைத்தான் நீங்கள் அதிகம் நேசித்தீர்கள். நீங்கள் கர்நாடக மலைச்சாதி பெண்ணுக்குசெய்த துரோகத்தால் அந்த பெண்ணின் கணவரே தற்கொலை செய்து கொண்டுள்ளாரே என்று முத்துலட்சுமிபேசிய பதில் கேசட் அனுப்பப்பட்டது.
அதை பெற்றுக் கொண்ட வீரப்பன் மீண்டும் ஒரு கேசட்டை அனுப்பினான்.
பண விவகாரம்:
அதில் வீரப்பன் முத்துலட்சுமியை கொல்வது குறித்தோ, அல்லது வரச் சொல்வது குறித்தோ எந்த தகவலும் இல்லை.இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதிர்ச்சி தரும் தகவலாக வீரப்பன் அவரது உறவினர்களுக்குகொடுத்த கோடி கோடியான பணத்தை பற்றி பேசியிருந்தான்.
மேலும் ஒரு அரசியல் தலைவரின் பெயரைச் சொல்லி அவருக்கு ரூ. 50,000 பணத்தை கொடு என்றுமுத்துலட்சுமிக்கு உத்தரவிட்டிருந்தான்.
முத்துலட்சுமி மறுப்பு:
ஆனால் அதிரடிப்படை வெளியிட்டுள்ள இந்தத் தகவல்களை முத்தலட்சுமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். நான்அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது என் கணவரிடம் இருந்து கேசட்கள் வந்தது உண்மைதான்.
அதில் என்னைப் பற்றியும், குழந்தைகள் பற்றியும் விசாரிப்பார். மற்றபடி என்னை திட்டியதாக போலீசார்வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை என்று கூறியுள்ளார்.
வீரப்பனின் பெயரை வைத்து அரசியலில் குதிக்கும் திட்டத்தில் இருக்கும் முத்துலட்சுமியை அதே வீரப்பன் பெயரைவைத்தே முடக்கும் முயற்சியாகவே இந்த கேசட்டுகளை அதிரடிப்படை இப்போது லீக் செய்துள்ளதாகத்தெரிகிறது.
அருங்காட்சியகம்:
இதற்கிடையே கொல்லப்பட்ட வீரப்பனுக்கு சென்னையில் ஒரு அரங்காட்சியகம் அமைக்க போலீசார் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இந்த அருங்காட்சியம் அமையவுள்ளதாம். அதில், வீரப்பன்கும்பலிடம் இருந்து அவ்வப்போது பிடிபட்ட ஆயுதங்கள், பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படுமாம்.












Click it and Unblock the Notifications