மத்திய அரசுக்கு நெருக்கடி தரவில்லை: இ.கம்யூ.
சென்னை:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இடது சாரிக் கட்சிகள்செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அயோத்தி தாச பண்டிதர் ஆகியதமிழறிஞர்களின் நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.ராஜா, இடது சாரிக் கட்சிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருவதாகவும்,மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளில் சற்றும் உண்மை இல்லை. அரசை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லும் ஆக்கப்பூர்வமானபங்களிப்பை இடது சாரிக் கட்சிகள் வழங்கி வருகின்றன.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கூட்டணி அரசின் சில முடிவுகளை நாங்கள் தீவிரமாக ஆட்சேபித்தோம். இதைவைத்து நாங்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறுவது தவறானதாகும்.
மக்கள் ஆதரவு அரசாக காங்கிரஸ் கூட்டணி அரசு இருக்க வண்டும் என விரும்புகிறோம். பொதுச் செயல் திட்டத்திலிருந்துகாங்கிரஸ் எப்போதெல்லாம் விலகிச் செல்கிறதோ, அப்போது நாங்கள் தலையிட்டு காங்கிரஸ் அரசை சரியான பாதைக்குஇழுத்து வருகிறோம்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் நாங்கள் எதிர்க்கவில்லை. சேது சத்திரத் திட்டம், தமிழ் செம்மொழி, வேலை வாய்ப்புஉறுதி சட்டம் என பல நல்ல விஷயங்களை நாங்கள் வரவேற்றிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார் ராஜா.
நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநதி கலந்து கொண்டு நினைவு தபால் தலைகளை வெளியிட்டார். மத்திய அமைச்சர் தயாநதிமாறன், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications