மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை விடுமுறைகள் ரத்து?
டெல்லி:
மத்திய அரசு பண்டிகை விடுமுறை நாட்களை ரத்து செய்து அமலாக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 17 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதில் சுதந்திர தினம்,குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 3 நாட்களும் தேசிய விடுமுறை நாட்கள். மற்ற 14 நாட்களும் மதரீதியானபண்டிகை விடுமுறை நாட்கள்.இந்த 14 விடுமுறை நாட்களையும் ரத்து செய்ய மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு மொழி மற்றும் மதரீதியிலான விடுமுறைகள் வழங்குவது ரத்துசெய்யப்டும்.
அதற்குப் பதிலாக ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் உயர்த்தப்படுகிறது. இனிமேல் இந்தவிடுமுறை 7 நாட்களிலிலிருந்து 10 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 14 பண்டிகை விடுமுறை நாட்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும்.ஊழியர்கள் தங்களுக்கு தேவையான பண்டிகை நாட்களில் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி எடுக்கும் விடுமுறை வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் ஊழியர்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படாது.
இந்த திட்டம் குறித்து மத்திய அமைச்சர் சபை செயலாளர் பி.கே. சதுர்வேதி தலைமையில் வருகிற 25ம் தேதிஆலோசனை நடைபெறுகிறது.
இது குறித்து பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களுக்கு கருத்து கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications