புதிய டி.வி. தொடங்குகிறது பாமக
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்காக தனியாக தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாக அக்கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட கல்லூரி பட்டதாரிகள் இணைந்து புதிதாக தமிழ்த் திரைக்கலை சிற்பிகள் என்ற அமைப்பைதொடங்கியுள்ளனர். பாமகவின் ஆதரவுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், மற்றபட்டதாரிகள் எல்லாம் படித்து முடித்தவுடன் வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால் திரைப்படக் கல்லூரிமாணவர்கள் நிலை அப்படியில்லை.
நன்கு படித்தும், திறமை இருந்தும் தகுதியான வேலை உங்களுக்குக் கிடைப்பதில்லை.
நீங்கள் குறும்படம் எடுக்க, திரைப்படம் எடுக்க நாங்கள் உதவ முடியும். ஆனால் எங்களிடம் பணம் இல்லை,நாங்கள் ஏழைக் கட்சி. ஆனால் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களைஉங்களுக்கு உதவச் சொல்வோம்.
நாங்கள் விரைவில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்கப் போகிறோம். அது முழுக்க முழுக்க வித்தியாசமானதொலைக்காட்சியாக இருக்கும். அதில் உங்களது அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்திக்கொள்வோம்.உங்களது திறமைகளை வெளிப்படுத்த நீங்களும் அந்தத் தொலைக்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது எல்லாத் தொலைக்காட்சிகளும் சினிமாவை நம்பியே இருக்கின்றன. ஆனால் எங்கள் தொலைக்காட்சிஅப்படி இருக்காது. சினிமாவைத் தாண்டிய எதார்த்தம் அதில் இருக்கும். வித்தியாசமானதாக இருக்கும்.
நான் சினிமாவுக்கு எதிரி அல்ல. ஒரு கற்பழிப்புக் காட்சியை 10 நிமிடங்களுக்கு படு அலங்கோலமாககாட்டுகிறார்கள். குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை. அதை 10 விநாடிகளில் காட்ட முடியும்.
அதேபோல, மது குடிப்பதை பல நமிடங்களுக்கு விலாவாரியாக காட்டுகிறார்கள். அதையும் சுருக்கமாககாட்டலாம்.
சமூக அக்கறையுடன் படங்களை எடுக்க வேண்டும். மனித நேயம், நமது பண்பாடு சிதையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இதுதான் எனது வேண்டுகோள் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications