தமிழக காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 20 காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவிலான காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மிக முக்கியமாற்றமாக மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த விஜயகுமார் மாற்றப்பட்டு திருநெல்வேலி சரகடிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இளம் பெண் ஜனனியை கஞ்சா வழக்கில் கைது செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்குவரவழைக்கப்பட்டு கடுமையாக கண்டிக்கப்பட்டவர் விஜயகுமார் என்பது நினைவிருக்கலாம்.
சர்ச்சையில் சிக்கிய விஜயகுமார் தற்போது மதுரையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை சரக டிஐஜியாக இருந்து வரும் கருணாசாகர், மதுரை மாநகர காவல்துறை ஆணையராக கூடுதல் பொறுப்புவகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னை காவல் இணை ஆணையராக இருந்து வந்த சைலேந்திரபாபு தென்சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதுவரை தென் சென்னை இணை ஆணையராக இருந்து வந்த உமாகணபதி சாஸ்திரி வட சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி காவல்துறை ஆணையராக பிரதீப் பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தென் சரக லஞ்ச ஒழிப்பு மற்றும்கண்காணிப்பு எஸ்.பியாக ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரேசன், மேற்கு சரக லஞ்ச ஒழிப்பு மற்றும்கண்காணிப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் பல காவல்துறை அதிகாரிகள்மாற்றப்பட்டுள்ளனர்.
7 இணை காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications