தமிழகத்தில் கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் 11 மாவட்டங்கள்- 39 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ள நிலைமை படு மோசமாக உள்ளது. மழை, வெள்ளத்திற்கு 39 பேர் இதுவரைஇறந்துள்ளனர்.
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரிக் கரையோரப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 11மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது.காவிரியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள்,குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்தத் தண்ணீர் திருச்சி அருகே உள்ள முக்கொம்பை அடைந்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. அம்மா மண்டபம், காவிரிப் படித்துறை நீரில் மூழ்கியுள்ளன. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் கரையைத் தாண்டிஊருக்குள்ளும் ஓடுகிறது.
இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும்காவிரி நீர் புகுந்து ஓடிக் கொண்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் கன மழையால் இடிந்து விட்டது.
இருப்பினும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பாபாசம், கும்பகோணம்வரையிலான காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துஓடுகிறது. வேலூர் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததால் பல ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் உடைந்ததால் சேலம்-திருச்சி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தென்பென்னை மற்றும் மலட்டாறிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ளகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்த நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் நேற்று மாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் வெள்ளக் காடாககாட்சி அளிக்கிறது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 12 செமீ மழையும், திருச்சியில் 12 செமீ மழையும், லால்குடியில் 11 செமீமழையும் பதிவாகியுள்ளது.
மழை மற்றும் ஆற்று வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications