கன மழைக்கு 7 பேர் பலி: அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கன மழைக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழைதீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டுநாட்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையால் அணை நிரம்பி வழிகிறது. உபரி நீராக விநாடிக்கு 1.60லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மேடான பகுதிகளுக்குமாற்றப்பட்டு வருகின்றனர். அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், திறந்து விடப்படும் நீரின்அளவு மேலும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தர்மபுரி மாவட்டம் தளி அருகே உள்ள பெரிய ஏரி நிரம்பி கரை உடைந்தது. இதனால் ஓசூர்-தளி சாலைஇரண்டாக உடைந்து அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் காரணமாக காவாப்பட்டி கிராமத்தில் 15வீடுகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் 15ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஏரி உடைந்து அந்தத்தண்ணீர் பாலாற்றில் கலந்து பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருப்பதால், பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாதனூர் பகுதியில் ஏரிளமான பொதுமக்கள் கூடி பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கரையில் நெகிழ்வு ஏற்பட்ட பலர் ஆற்றில் மூழ்கினர்.
இதில் சரோஜா, எல்லம்மாள், கோவிந்தன், அஸ்வினி ஆகியோர் ஆற்று மண்ணில் மூழ்கி உயிரிழந்தனர். மண்ணில் புதைந்துபலியான 4 பேரின் உடல்களையும் தீயணைப்புப் படையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு எடுத்தனர்.
ஆம்பூர் அருகே பச்சக்குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், அரசுப்பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு வேலூரை நோக்கி பாய்ந்து வருகிறது.
இதில் பாலாற்றின் குறுக்கே உள்ள பல தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆம்பூர், வேலூர் இடையேயானதரைப்பாலத்திலும் நீர் அதிக அளவில் ஓடி வருகிறது.
குடியாத்தத்தில் இருந்து 20 பயணிகளோடு ஆம்பூருக்கு வந்த அரசுப் பேருந்து தரைப்பாலத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாகபயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஆனாலும் பஸ் நடுப் பாலத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பாலத்தின் இடது ஓர தூணில் மோதி நின்றது. பஸ்சில் பயணித்தநடத்துநர் கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
மறு கரையில் பாலாற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து நடத்துனரையும், அவர்வைத்திருந்த பையையும் மீட்டு காப்பாற்றினர்.
இதேபோல, சேலம் மாவட்டம் அக்கரைபாளையம் என்ற இடத்தில் உள்ள ஏரியில் ஏற்பட்ட உடைப்பில் 3 பேர் உயிருடன்அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவிரி தவிர வைகை, தாமிரபரணி, மஞ்சளாறு, பாலாறு என முக்கிய ஆறுகள் அனைத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அனைத்து முக்கிய அணைகளுக்கும் நல்ல நீர் வரத்து உள்ளது. இதனால் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications