கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பெங்களூர்-சென்னை ரயில்கள் ரத்து
சென்னை:
பலத்த மழையால் பெங்களூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு பங்காருபேட்டை அருகே தடம்புரண்டது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சென்றுக் கொண்டிருந்த இந்த ரயில்பங்காருப்பேட்டை அடுத்துள்ள வரதராஜபுரம் அருகே இரவு 1.30 மணிக்கு தடம் புரண்டது.
ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இதனால் பயணிகள் அலறினர். ரயில் டிரைவர்உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.
மாற்று இன்ஜின் பொறுத்தப்பட்டு நேற்று மதியம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் இயக்கப்பட்டது.
பெங்களூர்-சென்னை ரயில்கள் ரத்து:
ரயில் தடம் புரண்டதால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டன.
பெங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்படும்ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ்ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பங்காருப்பேட்டையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மண் அரிப்புக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாகசென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்கள் இன்னும் சரிசெய்யப்படாததால், இன்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சென்னை-பெங்களூர் இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
இதற்கிடையே சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்து தண்டவாளங்கள் மண் அரிப்புக்குள்ளாகியுள்ளன.இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக சென்று கொண்டுள்ளன.
சென்னைக்கு வரும் மற்றும் சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்கள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்தே வந்து செல்கின்றன.இதனால் பயணிகள் பேசின் பிரிட்ஜ் நிலையம் சென்று ரயில்களைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications