திருச்சி நகரில் வெள்ளம் புகுந்தது; படகுகள் மூலம் மக்கள் மீட்பு!!
திருச்சி:
திருச்சி நகருக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆற்று வெள்ளம் ஓடுகிறது. பல்வேறுபகுதிகளில் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
காவிரி வெள்ளத்தின் பாதிப்பு தமிழகத்தின் 11 காவிரிக் கரையோர பகுதிகளை உலுக்கி எடுத்து வருகிறது. சேலம், நாமக்கல்,ஈரோடு, தஞ்சாவூர், நாகப்பட்டனம் உள்ளிட்ட 11 மாவட்டங்களும் காவிரி வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், திருச்சி அருகே முக்கொம்பை அடைந்தது. இன்று காலை முதல் திருச்சியில்காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகளவில் ஓடத் தொடங்கியது. காவிரியில் உள்ள ஆற்றுப் பாலம், கொள்ளிடம் ஆற்றுப் பாலம்,கல்லணை ஆகியவற்றின் மேல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இந் நிலையில் இன்று காலை காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், உறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில்ஆற்று நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து மேடான பகுதிகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.
நகரின் முக்கியப் பகுதிகள் பலவற்றில், ஆற்று நீர் புகுந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை போலீஸாரும்,தீயணைப்புப் படையினரும் படகுகள் மூலம் மீட்டு பத்திரமான இடத்திற்குக் கொண்டு சென்று வருகின்றனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாலும், கன மழை தொடர்ந்து நீடிப்பதாலும் திருச்சியில் வெள்ளபாதிப்பு அதிகமாகும் என அச்சம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications