பொதுத்துறை ஊழியர்களுக்கு ஜெ. சலுகை: உச்ச வரம்பை நீக்கி போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, உச்சவரம்பை நீக்கி முதலமைச்சர் ஜெயலலிதா 10 சதவீதம் போனஸ்அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:

விலை மற்றும் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படாமல் வணிக ரீதியாக செயல்படுகின்ற ஏனைய பொதுத்துறைநிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் போனஸ்உச்சவரம்பு சட்டத்தின் படி 2004-05ம் நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட எனதுஅரசு 14ம் தேதி ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணைப்படி வணிக ரீதியாக அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 45 ஆயிரம்தொழிலாளர்களும், பணியாளர்களும் போனஸ் பெறத் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.

ஆனால் இந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 23 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும்பணியாளர்கள் மத்திய அரசின் போனஸ் சட்ட சம்பள உச்சவரம்பான 3500 ரூபாய் என்ற சம்பள அளவைஎட்டிவிட்ட காரணத்தால் போனஸ் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.

இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் அனைவரும்பயன்பெறுகின்ற வகையில் மேற்குறித்த போனஸ் உச்சவரம்பை தளர்த்தி அவர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ்மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.

போனஸ் சட்டத்தின்படி ஒதுக்கக்கூடிய உபரித் தொகை உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு சேமிப்புகிடங்கு நிறுவனம், போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகியவற்றில்பணியாற்றும் சி மற்றும் டி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இவ்வாறே உச்ச வரம்புவிலக்களிப்பட்டு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.

இதனால் 38 அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த 68,000தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் இந்நிறுவனங்களுக்கு மொத்தம் சுமார் 9.17 கோடி ரூபாய் கூடுதல்செலவு ஏற்படும்.

இதை தொடர்ந்து தேயிலை, வனத்தோட்ட தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில்இயங்கும் அரசு ரப்பர் கழகம் மற்றும் திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் ஆகியவற்றை பொறுத்தமட்டில்,

அங்கு பணியாற்றும் சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற கடினமானபணியினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 8.33 சதவீத போனஸ் தொகை 1.67 சதவீத கருணைத் தொகைமற்றும் 10 சதவீத கூடுதல் கருணைத் தொகை ஆக மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு இணையங்கள் மற்றும் மற்ற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் சிமற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். இதே போன்று போனஸ்சட்டத்தின் கீழ் வராத தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.1,200 கருணைத் தொகையாகவழங்கப்படும்.

இதனால் 80,000 கூட்டுறவு பணியாளர்கள் பயனடைவர். இதற்கு ஏற்படும் செலவு ரூ.20 கோடியாகும்.

இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+