சென்னை பட்டாசு கடையில் தீ: ஒருவர் பலி
சென்னை:
சென்னை பாரிமுனையில் உள்ள பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் கருகி இறந்தார். 10 பேர்காயமடைந்தனர்.
தீபாவளியையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள பல்வேறு கடைகளில் பட்டாசு மொத்த விற்பனை தொடங்கியுள்ளது.சிவகாசியிலிருந்து நேரடியாக வரவழைக்கப்படும் பட்டாசுகள் இங்குள்ள பந்தர் தெரு மற்றும் வேறு சில தெருக்களில் உள்ளகடைகள் மூலம் சென்னை நகர வியாபாரிகளுக்கு சில்லறையாக விற்கப்படுகின்றன.இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பந்தர் தெருவில் உள்ள இரு கடைகளில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்தக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அந்தத் தெருவே தீயில் எரிவது போல காணப்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் ஒருவர் கருகிஉயிரிழந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. தீவிபத்தையடுத்து கடைகளுக்கு மேலே இருந்த கட்டடங்களிலிருந்து 10 பேர்கீழே குதித்தபோது அவர்கள் காயமடைந்தனர்.
அந்தத் தெருவில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தீயணைப்புப்படையினரின் துரித நடவடிக்கையால் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications