லண்டன் குண்டு வெடிப்பு: இந்தியர் கைது
லண்டன்:
லண்டனில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் சுரங்க ரெயில், மாடி பஸ்சில் கடந்த ஜூலையில் குண்டுகள் வெடித்து பலர்உயிரிழந்தனர்.இந்த தேடுதல் வேட்டையில் இம்ரான் பட்டீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பிறந்த அவர்இந்தியாவில் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
லண்டன் குண்டு வெடிப்பில் பங்கேற்குமாறு தீவிரவாத பிரிவு தலைவர் முகமது சித்திக் கான் என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இம்ரான் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றவர் என்று தெரியவந்துள்ளது.
குண்டு வெடிப்புக்கு முன் இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் டீயூஸ்பரி என்ற இடத்தில் உள்ள அவரதுவீட்டுக்கு தீவிரவாதத் தலைவர் முகமது சித்திக் கான், மனித குண்டுகளான தன்வீர், லிண்ட்சாய். உசைன் ஆகியோர்சென்று சந்தித்து பேசியுள்ளனர்.
மேலும் அவர்கள் புனிதப் போரில் பங்கேற்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுக்கும் வீடியோ கேசட்டைபார்த்துள்ளனர். இங்கிலாந்தில் தாக்குதல் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில்பங்கேற்குமாறு இம்ரானை முகமது சித்திக் கான் கேட்டுள்ளார்.
ஆனால் தாக்குதல் பட்டியலில் ஒரு பள்ளிக்கூடமும் இருந்ததால் அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுகருதி அவர்களுடன் தாக்குதலில் பங்கேற்க இம்ரான் மறுத்துள்ளார்.
மேலும் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த மாட்டேன். இங்கிலாந்துக்கு வெளியே தாக்குதல் நடத்த விரும்புகிறேன்என்றும் டீயூஸ்பரியை சேர்ந்த 6 பேர் பாகிஸ்தான் சென்று தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்று திரும்பியது எனக்குதெரியும் என்றும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications