தொடர் மழை: தமிழகத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம்
சென்னை:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகளில் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் மூழ்கியுள்ளன. காவிரி கரையோரப் பகுதிகளானதிருச்சி, ஸ்ரீரங்கம், பள்ளிபாளையம், குமாரபாளையம், ஒருவந்தூர், ஈரோடு, பரமத்திவேலூர், பகுதிகள்வெள்ளத்தில் மூழ்கி, தீவுகளைப் போல காட்சியளிக்கின்றன.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.அவற்றின் உடல்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கியிருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வெள்ள நீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் குடிநீர் முறையாகக் கிடைக்கவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும், கலயாண மண்டபங்களிலும் அமைக்கப்பட்டுள்ளமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 5,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கென மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
வெள்ளம் காரணமாக வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க டீக்கடைகள் மற்றும்ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் நீரை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரை காய்ச்சிகுடிக்குமாறும் பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரியில் பன்னஅள்ளியில் உள்ள குமாரசெட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. சின்னாற்றின்வழியோரக் கிராமங்களிலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி குழுவினர் தர்மபுரி மாவட்டத்துக்கு சென்று, ஆய்வுகளைதொடங்கியுள்ளனர். நோய் பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் மாத்திரைகளைவழங்கி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பாறைகள்சாலைகளில் உருண்டு விழுந்தன. இதனால் பல மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதியில்தொலைபேசி இணைப்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications