நடிகை, நடிகர்கள் வீடுகளில் விடிய விடிய சோதனை: ரூ. 30 கோடி சிக்கியது- இன்று வங்கி லாக்கர்கள் திறப்பு
சென்னை:
![]() |
19 திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரின் வீடுகளில் நேற்று இரவும் விடிய விடிய வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 10 கோடி அளவுக்கு பணமும் ரூ. 20 கோடி அளவுக்கு சொத்துஆவணங்களும் பிடிபட்டுள்ளதாகத் தெரிகிறது.
நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கிய வருமான வரிச்சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றிரவு முழுக்க இச் சோதனைநீடித்தது.
இன்று அந்த நடிகை, நடிகர்களின் வங்கி லாக்கர்கள் திறந்து சோதனையிடப்பட்டவுள்ளன.
![]() |
நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு, பெசன்ட் நகரில் உள்ள விஜய்யின் வீடு (விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமானஎஸ்.ஏ.சந்திரசேகரனிடம் வருமான வரி சோதனை நடந்தது), வேப்பேரியில் உள்ள த்ரிஷாவின் வீடு, வட பழனியில் உள்ள ஜெயம்ரவியின் வீடு (இங்கு அவரது தந்தை எடிட்டர் மோகன், இயக்குனரான அவரது அண்ணன் மற்றும் ரவியிடம் விசாரணை நடந்தது,
தி.நகரில் உள்ள சிலம்பரசனின் வீடு, கூடவே இருக்கும் அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளர்-இயக்குனரான விஜய டி.ராஜேந்தர்ஆகியோரிடமும்,
![]() |
சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் வீடு, அதே பகுதியில் உள்ள நடிகை ஸ்னேகாவின் வீடு, அசோக் நகரில் உள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் வீடு, வட பழனியில் உள்ள இயக்குனர்-தயாரிப்பாளர் ஷங்கரின் வீடு, அதே பகுதியில் உள்ளஇயக்குனர்-தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யாவின் வீடு,
வட பழனியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் வீடு, கே.கே. நகரில் உள்ள ஹாரிஸ் ஜெயராஜின் வீடு, இளையராஜாவின் வீடு (இங்கு யுவன்சங்கர் ராஜாவின் வருமானம் தொடர்பாக ரெய்ட் நடந்தது) ஆகியோரின் வீடுகளில் ரெய்ட் நடந்தது.
அதே போல நடிகைகள் ஆசினும் நயனதாராவும் தங்கியுள்ள தி.நகர் நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
பாடகர்கள் மனோ, சீனிவாஸ், சினிமா பைனான்சியர்களான பங்கஜ் மேத்தா, சுபாஷ் நெகர், சஞ்சய் வத்வானி ஆகியோரின் வீடுகளில்சோதனைகள் நடந்தன.
![]() |
இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரையிலான பணம், சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாகவருமான வரித்துறை அதிகாரியான தத்தா தெரிவித்தார்.
ஆனால், ரூ. 10 கோடி கருப்புப் பணமும் ரூ. 20 கோடியளவுக்கு ஆவணங்களுமாக மொத்தத்தில் ரூ. 30 கோடி வரை சிக்கியதாகத் தெரியவருகிறது.
நடிகர்களின் பினாமிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும் விசாரணை நடந்துள்ளது.
விஜய் ஒரு படத்துக்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக இந்த ரெய்டில் தெரிய வந்துள்ளது. இவரது சம்பளம் ரூ. 4 கோடி என்றுதான் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரூ. 6 கோடி சம்பளம் தவிர தனது படங்களின் பல முக்கியஏரியாக்களின் வினியோக உரிமையையும் இவர் வாங்கியுள்ளார். இதனால் விஜய்க்கு பல மடங்கு லாபம் கிடைத்து வந்துள்ளது.
![]() |
அதே போல அந்நியன் படத்துக்கு விக்ரம் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் ரூ. 2 கோடியேவாங்குவதாக வெளியில் பேசப்பட்டது.
இந் நிலையில் இன்று இந்த நடிகை, நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்களின் வங்கி லாக்கர்கள்திறக்கப்பட்டு சோதனையிடப்படவுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

















Click it and Unblock the Notifications