திருச்சி வெள்ள சீரமைப்பு பணியில் ராணுவம்
திருச்சி:
![]() |
திருச்சி வெள்ள சீரமைப்பு பணியில் ராணுவம் களமிரங்கியுள்ளது.
காவிரியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோர மாவட்டங்கள் பெருமளவுபாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் எங்கும் மேலும் மழைநீடிக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் 56 கிராமங்கள் தண்ணீர் புகுந்து 500 குடும்பங்களைச் சேர்ந்த 7,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
![]() |
ஸ்ரீரங்கத்தில் செட்டிதோப்பு என்ற இடத்தில் காவிரியாற்றின் கரையில் கசிவு ஏற்பட்டு கரை உடையும் அபாயம்ஏற்பட்டது. அதனால் ஸ்ரீரங்கத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக மணல் மூட்டைகள்கொண்டு இந்த கரையை பலப்படுத்தியதால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட ராணுவத்தின் உதவி நாடப்பட்டது. இதைதொடர்ந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ராணுவ முகாமில் இருந்து 80 ராணுவ வீரர்கள் ஸ்ரீரங்கம்அம்மா மண்டபம் ரங்க பவனத்தில் முகாமிட்டு கரை உடைப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெங்களுர் ராணுவ முகாமில் இருந்து 20 ராணுவ என்ஜினியர்களும் வந்தனர். இவர்கள் அனைவரும் 2பிரிவகளாக பிரிக்கப்பட்டு செட்டிதோப்பில் காவிரியாற்றில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள பகுதிக்கும்,திருவானைக்கோவில்-திருவளர்ச்சோலை பகுதியில் பனையபுரம் என்ற இடத்தில் சாலை துண்டிக்கப்பட்டுவெள்ளம் பாயும் இடத்திற்கு ஒரு பிரிவினரும் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
![]() |
மலட்டாறு கரை உடைந்தது:
காவிரி ஆற்றிலிருந்து பாசனத்துக்கு செல்லும் மலட்டாறு கரையில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மலட்டாறு கரை திடீரென்று உடைந்ததால் அதற்கு தற்காலிகமாக இரும்பு தகடு மூலம் 70 மீட்டர் நீளத்துக்குசெயற்கை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் மேலூர் சாலையிலுள்ள அணைக்கரை பகுதியிலிருந்து மலட்டாறு என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம்ரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சனத்துக்கு தேவையான தண்ணீர் இந்த ஆற்றில் இருந்து எடுத்தற்கான வரலாறுஉள்ளது.
3 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஆற்றில் மேலூர் சாலை தாத்தாச்சாரியார் கோட்டம் அருகில் 25 அடி நீளத்தில்உடைப்பு ஏற்பட்டது. அதனால் காவிரியும், மலட்டாறும் சேர்ந்து ஸ்ரீரங்கம் பகுதி தண்ணீரில் மூழ்கும் அபாயம்ஏற்பட்டது.
![]() |
இந்த தகவலறிந்த பொதுப்பணித்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன்மணல் மூட்டைகளால் உடைப்பை அடைக்க முயன்றனர்.
இருந்தாலும் காவிரி மற்றும் மலட்டாற்றில் தண்ணீர் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்ததால் மணல் மூட்டைகளால்அடைப்பை மூட முடியவில்லை.
இதனால் 70 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் அரை வட்டத்தில் செயற்கை தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.இதனால் உடைப்பு ஏற்பட்ட 25 அடி கரை பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதே போல் தஞ்சாவூர் கொள்ளிட அணைக்கு 2.21 லட்சம் கன அடி நீர் செல்வதால் பல இடங்களில் நீர் கசிவுஏற்பட்டு, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதியிலுள்ள 11ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்கவைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வேண்டியஉதவிகளை செய்து வருகிறது.
















Click it and Unblock the Notifications