வெள்ளம் வடிகிறது: மெதுவாய் இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை- 3 லட்சம் பேர் வீடிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் இன்னும் தொடர்ந்து வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

Chennai Guindy railway station

கடந்த இரு தினங்களாகப் பெய்து வந்த கன மழை இன்று காலை கொஞ்சம் குறைந்தது. இப்போது அங்கு மழை விட்டு விட்டுப்பெய்து வருகிறது.

மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி, மைலாப்பூர் பகுதிகளில் இன்றுவெள்ளம் வடிந்துவிட்டது. அதே போல பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனையிலும் வெள்ள நீர் வடிய ஆரம்பித்துவிட்டது.

அதே நேரத்தில் புளியந்தோப்பு, வியாசர்பாடி, மாதவரம், ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், பட்டாளம், செம்பியம்,எருக்கஞ்சேரி ஆகிய இடங்களில் பல பகுதிகளில் தொடர்ந்து வெள்ள நீர் தேங்கியுள்ளது.

சென்னையில் பல பகுதிகளிலும் தொடர்ந்து மின்சார சப்ளையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் சப்ளை இல்லை.

மேலும் பால், நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய்களில்கழிவு நீர் கலந்துவிட்டது. இதனால் சுற்றிலும் வெள்ளம் இருந்தாலும் குடிநீருக்காக மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

அதே போல தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால்செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாமல் போனதால், செல்போன்களையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள்தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் கொஞ்சம் தாமதமாகவே மீட்புப் பணிகளில் ஈடுபட்டாலும் சிறப்பான முறையில்செயல்பட்டனர். ஸ்டான்லி நகர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய மக்களை இணை கமிஷ்னர் சைலேந்திரபாபு தலைமையிலானடீம் நேரடியாகக் களத்தில் இறங்கி படகுகள் மூலம் மீட்டது.

சென்னையில் கடந்த இரு நாட்களில் மட்டும் 427 மிமி மழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழையாகும்.

வெள்ளம் மெதுவாக வடியத் தொடங்கிவிட்டதால் சென்னையில் மீண்டும் மாநகரப் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.ஆனால், நிலைமை சகஜமாக பல நாட்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே வட சென்னைப் பகுதியில் வீடுகளை இழந்த சுமார் 3 லட்சம் பேர் 100 பள்ளிகள், 13 திருமண மண்டபங்கள், 20மாநகராட்சிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களு"ககு உணவும் உடையும் தரப்பட்டு வருகிறது.

கூவம் ஆற்றில் (சாக்கடையில்) வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதையொட்டியிருந்த பல குடிசைப் பகுதிகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.

சூளை, ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை ஆகிய மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராட்சதமோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளம் வடிய ஆரம்பித்திருப்பதால் மின்சார ரயில்களும் இயங்க ஆரம்பித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+