ஆந்திராவுக்கு நகர்ந்தது புயல்!: சென்னை தப்பியது!!
சென்னை:
வங்கக் கடலில் சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த புயல் இன்று மாலை ஆந்திராவின்நெல்லூர்-மசூலிப்பட்டிணம் இடையே இன்று கரையை கடக்கிறது. இதனால் புயல் ஆபத்தில் இருந்து சென்னைதப்பிவிட்டது.
நேற்றிரவு வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 150 கிலோ மீட்டர்தொலையில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.இதையடுத்து இந்தப் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை-ஓங்கோல் இடையே கரையை கடக்கும்என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் அது மேலும் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டிணம்இடையே கரையை கடக்கவுள்ளது.
இதனால் சென்னைக்கு ஏற்பட்ட புயல் ஆபத்து நீங்கிவிட்டது. ஆனாலும் புயல் கரையை கடப்பதையொட்டிசென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோர பகுதிகளில் 55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசும்.
சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டிணம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 3வது நிலைஎச்சரிக்கை சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு இன்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடை மழை காரணமாக சென்னை செட்டிரலில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் இன்று(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தென் ஆந்திர் பகுதிகளில் கன மழை பெய்யஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் வங்கக் கடலில் விரைவிலேயே மேலும் பல காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி புயலாகமாறக் கூடிய வாய்ப்பு இருப்பதா தேசிய வானிலை மையத்தின் தலைவர் அகிலேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.
இதனால் அடுத்ததடுத்து தமிழகம், ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்கத்தை புயல் தொடர்ந்து தாக்கலாம் என்றுதெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications