சென்னையில் வெள்ளத்தில் நடந்த பிரசவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிரசவ வலி ஏற்பட்ட பெண் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல்சாலையிலேயே பிரசவம் ஏற்பட்டது.

சைதாப்பேட்டையை சேர்ந்த கலா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரதுகணவர் ஒரு ஆட்டோ டிரைவர், உடனே அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் சாலைகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாலும், சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்ததாலும்எந்த வழியாகவும் மருத்துவமனைக்கு போய் சேரமுடியவில்லை. இதற்குள் பிரசவ வலி அதிகமானதால் தி.நகர்தண்டபாணி சாலையில் வெள்ளத்தின் நடுவில் திரைமரைவில் அவரது மனைவிக்கு பிரசவம் நடந்தது.

மெழுகுவர்த்திக்கு டிமாண்ட்:

மேலும் கடும் மழை காரணமாக சென்னையில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சென்னை நகரம் இருளில்மூழ்கியது. அதனால் வீடுகளுக்கு ஒளியேற்ற மெழுகுவர்த்தி வாங்க கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர்.இதனால் கடைகளில் மெழுகுவர்த்தி கிடைக்காமல் கிராக்கி ஏற்பட்டது.

பெண்கள் போராட்டம்:

தண்டையார் பேட்டை இளையமுதலி சந்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.இந்த பகுதியில் மாநகராட்சி எந்த நிவாரணப் பணிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில்ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதி பெண்களும் கடற்கரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூழ்கிக் கிடக்கும் சூளை:

சூளை பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்து 3 நாட்கள் ஆகியும் பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, சூளை, புளியந்தோப்பு, ஆகிய பகுதிகளில்தண்ணீர் இன்னும் வடியவில்லை. மார்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே மக்கள்தவிக்கிறார்கள்.

வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியில்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக காற்கறி விலை, பால் விலை ஆகியன ஏகத்துக்கு கிடு கிடு எனஉயர்ந்துள்ளது.

பிரட், பிஸ்கெட்:

கடைகள் பெரும்பான்மையாக திறக்கப்படாததால் நடுத்தர மக்கள் கடைகளில் உள்ள பிரட் பாக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக வாங்கி சென்றுவிட்டனர். இதனால் சாப்பிட பிரட் கூட கிடைக்காமல் வாழைப்பழம், பிஸ்கேட் என்றுகிடைத்ததை மக்கள் வாங்கிச் சென்றனர்.

2 மடங்கான பால் விலை:

பால் வாங்க சென்றால் அதிர்ச்சியாக உள்ளது ரூ. 7க்கு விற்ற பால் ரூ.15க்கு விற்கிறார்கள் என்கிறார் வெள்ளத்தில்பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர். மேலும் பல இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் பால்கிடைக்கவில்லை என்கின்றனர்.

மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு:

காய்கறிகளில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ரூ. 50 கொடுத்தாலும் கிடைப்பதுஅரிதாக உள்ளது.

இன்னும் பல வீடுகளில் உள்ளவர்கள் தட்டுமுட்டு சமான்களுடன் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.பல குடும்பங்கள் சமைக்க கூட வழியில்லாமல் பட்டினியில் தவிக்கின்றனர்.

இந்த நிலை நீடித்தால் சென்னை வாசிகள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிரமம் தான்.

புளியந்தோப்பில் ராணுவம்:

இதற்கிடையே புளியந்தோப்பு பகுதியில் நீர் சூழ்ந்துவிட்டதால் அங்கு மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தின்உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+