நிவாரணப் பணிகளில் அரசு படு மந்தம்: திமுக
சென்னை:
சென்னை மாநகராட்சியான ரிப்பன் கட்டடத்தை சுற்றியிருக்கும் நீரையே வெளியேற்ற முடியாதவர்கள் எப்படி மாநகர மக்களைக்காப்பாற்றப் போகிறார்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மேயருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மேயராக இருந்தபோது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே 10மண்டலங்களுக்கும் தாற்காலிக பணியாளர்கைள நியமித்து கால்வாய்களை தூர் வாரும் பணியை மேற்கொண்டேன்.இதனால் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும்புதிய சாக்கடைகள் கட்டும் வேலையையும் நிறுத்துவிட்டார்கள்.
இதனால் தான் இரண்டு நாள் மழையில் சென்னை மக்கள் சொல்லொண்ணாத துயரத்தை அனுபவித்துவிட்டனர். சென்னைமாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் பில்டிங்கை சுற்றியே நீர் தேங்கி நிற்கிறது. அதைக் கூட இன்னும் அப்புறப்படுத்தவில்லை.
வெள்ளத்தின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு தயாரிக்கக் கட்டப்பட்ட சைதை சிஐடி நகர் உணவுக் கூடத்தைக் கூட இந்தஅரசு கல்யாண மண்டபமாக மாற்றிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்துத் தரக் கூட இந்த அரசால்முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications