சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜெ !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்.

சென்னையில் இடைவிடாத கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிரஆலோசனை நடத்தினார்.

பிறகு ஜெயலலிதா மழையால் பாதிக்கப்பட்ட பூங்கா நகர், யானை கவுனி, சூளை, வேப்பேரி, ஆகிய இடங்களைபார்வையிட்டார். பின்னர் சிந்தாரிபேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைசந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து அண்ணா நகர் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி குளம் நிரம்பி இப்பதை பார்வையிட்டார்.அங்கிருந்து நொச்சிகுப்பம் பகுதிக்கு சென்று அங்கு சமூக நல கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துஆறுதல் கூறினார்.

நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. மழை நிலவரங்களை அரசு நிர்வாகம் மிக திறமையாகசமாளித்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.

மேலும் நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. தேவையான பகுதிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.

மின்சாரம் தாக்கி மரணம் ஏற்படுவதை தடுப்பதற்காக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை சேதங்களை கண்டறியவும், நிவாரண பணிகளை செய்யவும் அமைச்சர்கள் பொன்னையன், பன்னீர்செல்வம், ஜெயக்குமார். தளவாய் சுந்தரம், அனிதா ராதாகிருஷ்ணன், விசுவநாதன், அன்பழகன் ஆகியோர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை ஓய்ந்ததும் இது பற்றி ஆராய்ந்து மத்திய அரசிடம் நிவாரணஉதவி கோரப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+