மருதுபாண்டியர் விழா: சிக்கிய கார்த்திக்
சிவகங்கை:
![]() |
மருதுபாண்டியரின் குருபூஜைக்கு வந்த நடிகர் கார்த்திக் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் கூட்டத்தில்சிக்கித் தவித்தார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் நடிகர்கள்ஊர்வலம் நடத்தக் கூடாது என்றும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் தேவர் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் தேவர் குருபூஜை விழாவில் தனது அரசியல் பிரவேசம் குறித்துஅறிவிப்பார் என்று செய்தி வெளியானதை தொடர்ந்து, அதை தடுக்கவே தமிழக அரசு இந்த முன்னேற்பாடுகளைசெய்தது.
இந் நிலையில் மருது பாண்டியர்களின் 204வது குருபூஜை விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கார்த்திக் வந்த தகவல் அறிந்ததும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மருது பாண்டியர்நினைவிடத்தில் குவிந்தனர். இதனால் கார்த்திக்கால் நினைவிடத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
பிறகு கார்த்திக் ரசிகர்களை பார்த்து கும்பிட்டு வழிவிடுமாறு சைகை மூலம் கேட்டார். கூட்டம் அதிகமானதே தவிரவழி கிடைக்கவில்லை. இதனால் திக்குமுக்காடிப் போன கார்த்திக் ஒரு கட்டத்தில் பதற்றமானார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரை பின் பக்க பாதை வழியாக மீட்டுச் சென்றனர்.
அங்கும் கூட்டம் அதிகமானதால் அவரால் அந்தப் பகுதியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இதையடுத்துபோலீசார் கார்த்திக்கை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அதன் மூலம் மாற்று பாதைவழியாக அழைத்து வந்து அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications