செம்மொழி தகுதி பெற 2000 ஆண்டுகால பழமை வேண்டும்- மத்திய அரசு
சென்னை:
செம்மொழிக்கான தகுதியை 1,500 ஆண்டில் இருந்து 2,000ம் ஆண்டாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாவது:தமிழை செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது செம்மொழிக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு(மொழியின் பழமையை நிர்ணயிக்க) குறைவாக இருக்கிறது என்றும்,
அதை 2,000ம் ஆண்டாக நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியதை திமுக தலைவர்கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் கவனத்திற்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கவனத்திற்கும் நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் கொண்டு சென்றிருந்தார்.
அதற்கேற்ப தற்போது கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், செம்மொழிக்கான தகுதியை 1,500 ஆண்டில்இருந்து 2,000ம் ஆண்டாக உயர்த்தப்பட்டது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் செம்மொழிப் பட்டியலில் தமிழ் மொழியுடன் சமஸ்கிருத மொழியும்இணைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழும், சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதியை இந்தியாவில் பெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டவுடன் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளையும்செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்தந்த மாநிலங்களில் எழுந்துள்ளது.
இதையடுத்து ஒரு மொழி செம்மொழி அந்தஸ்து பெற வேண்டுமானால் 2,000 காலப் பழமையும், 2000 காலஇலக்கிய வளமும் இருக்க வேண்டும் என்ற தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என கருணாநிதி உள்ளிட்டோர் மத்தியஅரசைக் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications