தேவர் ஜோதி லாரி மோதி சிறுவன் சாவு
திருப்புவனம்:
குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்திற்கு தேவர் ஜோதியை ஏந்திச் சென்ற வாகனம் மோதி சிறுவன்பரிதாபமாக இறந்தான்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை விழாதொடங்கியுள்ளது.இதையடுத்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பசும்பொன்நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்திலிருந்து முக்குலத்தோர் சமூதாயத்தைச் சேர்ந்த பலர் லாரிகளில் தேவர்ஜோதியை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக பசும்பொன்னுக்கு சென்றனர்.
படு வேகமாக அவர்கள் சென்றதால் அவர்கள் சென்ற சாலையில் பெரும் பதட்டம் நிலவியது. இந்த நிலையில்ஊர்வலமாக வந்த லாரிகளில் ஒன்று, மதுரை அருகே உள்ள திருப்புவனம் பகுதியில் வந்தபோது, சாலையோரம்வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இறந்த சிறுவனும் முக்குலத்தோர்சமூதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.
சிறுவனை மோதிக் கொன்ற லாரியைப் பிடிக்க போலீஸார் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றுகூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் முக்குலத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பசும்பொன் நோக்கிவரும் தென் மாவட்ட சாலைகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பசும்பொன்னில் மட்டும் 4000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications