டெல்லி குண்டுவடிப்பு: உஷார் நிலையில் சென்னை
சென்னை:
டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை நகரில் காவல்துறையினர் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை அடுத்தடுத்து நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர்பலியாயினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் செயலாக இது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத் தலைநகர் சென்னையிலும், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள், மசூதிகள்,தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தீபாவளிக் கூட்டம் அதிகமாக உள்ள தி.நிகர், புரசைவாக்கம்உள்ளிட்டக்கிய இடங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
முக்கியச் சாலைகளின் சந்திப்புகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.
ரெயில்வே நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்குள்வருவோரிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
ரெயில்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான வகையில் கிடக்கும் பொருட்கள், பார்சல்களை பொதுமக்கள் தொட வேண்டாம், அதுகுறித்து அருகில்உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை ஏற்கனவே சந்தித்துள்ள கோவையிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியஇடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அமைப்புகள் சிலவற்றின் செயல்பாடுகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மதுரையிலும் மீனாட்சிஅம்மன் கோவில், ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications